தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரேயா. இவர் தமிழின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் திடீரென தனக்கு ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடம் ஆகிறது எனக் கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
அவரது மகள் போட்டோவும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. ஸ்ரேயா ராஜமவுளியின் இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் சில படங்களை தன் கைவசமும் வைத்துள்ளார்.
விடுமுறையை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள ஸ்ரேயா, பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்பொழுது வைரலாகி வருகின்றன.