குழந்தைகளை தனியா ரூமுக்குள்ள விடாதீங்க… நாமதான் கவனமா இருக்கணும்… அனல் பறக்கும் கார்த்திக் பேச்சு….

By Begam

Published on:

தமிழின் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் நடிகர் சிவகுமாரின் பிள்ளைகள். இவர்கள் இருவரும் நடிப்பில் மட்டும் இன்றி பல சமூக நல பணிகளையும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ‘சிவக்குமார் கல்வி நிலையம் மற்றும் அறக்கட்டளை விருதுகள்’ 2022 ஆண்டுக்கான நிகழ்வு அகரம் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது.

   

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் அதில் அவர் பேசும்போது, ‘போதைப் பழக்கம் என்பது பள்ளி மாணவர்கள் வரை சென்றுள்ளது. அது இன்று வரை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தண்ணி அடிப்பதை காட்டிலும், தம் அடிப்பதை காட்டிலும் போதைப்பொருட்கள் உண்பதை சீக்கிரமாக கண்டுபிடிக்க முடியாது.

 

ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால் அதை உட்கொண்டு விட்டு அமைதியாக இருப்பவராகவும் உள்ளார். இப்படி போதைப் பொருள்கள் எடுப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. பெட்டிக்கடை அண்ணாச்சி பலரும் அது போதைப்பொருள் என்று தெரியாமல் விற்கின்றனர். மாணவர்களும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக எண்ணி அதை பயன்படுத்துகின்றனர்.

போதைப் பொருளின் தாக்கம் குறைந்த உடன் அவர்கள் இந்த உலகத்திற்கு தான் வந்தாக வேண்டும். அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளை அவர்கள் தான் தீர்த்தாக வேண்டும் என்பதை அவர்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். போதைப் பொருட்கள் அந்த பிரச்சனையை நீக்க போவதில்லை.

குறிப்பாக உங்கள் பிள்ளைகள் போனை எடுத்துக் கொண்டு ரூமிற்கு சென்றால் , அவர்களை நீங்கள் தனியாக விடாதீர்கள். இதைப்பற்றி நான் தனியாக பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். இங்கு மேடையிலேயே இதனை ஆரம்பித்து வைக்கிறேன். கிராமப்புற மாணவர்கள் இங்கு  நிறைய பேர் இருக்கிறீர்கள்.

உங்களது சிந்தனைகள் தன்னம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு வைராக்கியம் வெறியுடன் நினைத்ததை சாதிக்க வேண்டும்,என்று எண்ணி முன்னேறுங்கள். உங்களைச் சுற்றி எழும் எதிர்மறையான விஷயங்களை காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் கனவு நிச்சயம் நனவாகும்’.என்று கூறியுள்ளார். இன்னும் நிறைய கருத்துக்களை நடிகர் கார்த்தி கூறியுள்ளார். அதை கீழ்காணும் வீடியோவில் நாம் பார்க்கலாம்.இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

author avatar