முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணியுடன் நெருக்கம் காட்டி வருவதால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்ட ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான நகர செயலாளர் சேகர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து ஒன்றிய செயலாளர்கள் கனகராஜா, தியாகராஜன், சண்முகம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். தனது அணியின் தூண்களாகக் கருதப்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அடுத்தடுத்து தாய்க்கழகமான அதிமுகவிற்குத் திரும்புவது, ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் அரசியல் கலக்கத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
