நாங்க பாஜகவின் ‘பி’ டீம்… அப்போ ஜனநாயகன் ஏன் ரிலீஸ் ஆகல..? ரூ.1500 கோடி போச்சு… டுவிஸ்ட் வைத்த ஆதவ் அர்ஜுனா…!!

By Soundarya on பங்குனி 22, 2026

Spread the love

மதச்சார்பற்ற கொள்கையில் விஜய் உறுதியாக இருப்பதால் தான், அவரது ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்னும் முடக்கப்பட்டுள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். விஜய் பாஜகவின் ‘பி’ டீமாக இருந்திருந்தால், இந்தப் படம் ஜனவரி மாதத்திலேயே ரிலீஸ் ஆகியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகியிருந்தால், அதன் மூலம் விஜய் சுமார் 1,500 கோடி ரூபாய் வரை சம்பாதித்திருப்பார் என ஆதவ் அர்ஜுனா கணித்துள்ளார். விஜய்யின் அரசியல் நிலைப்பாடு மற்றும் கொள்கை உறுதியே பட ரிலீஸ் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்பது அவரது கருத்தாக உள்ளது.

   

அதே சமயம், இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகத் தணிக்கை குழு (CBFC) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது, இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.