காலையிலேயே அதிர்ச்சி..! தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து… 60 பயணிகளின் நிலை என்ன..? தூத்துக்குடியில் பயங்கரம்..!!

By Soundarya on பங்குனி 22, 2026

Spread the love

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, வாகைகுளம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாகத் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பேருந்தின் உட்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், உடனடியாகப் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை எச்சரித்தார். பேருந்துக்குள் இருந்த சுமார் 60 பயணிகள் அலறியபடி அவசர அவசரமாகக் கீழே இறங்கியதால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டு அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடிப் பேருந்தில் பற்றி எரிந்த தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தது. பேருந்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.