அட கடவுளே… டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்த மனுஷன்… திடீர்னு சுருண்டு விழுந்துட்டான்… விநாயகர் ஊர்வலத்தில் உயிரைப் பறித்த பேரதிர்ச்சி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

By Swetha on புரட்டாதி 21, 2026

Spread the love

மேற்கு கோதாவரி மாவட்டம் தடேபள்ளிகூடம் பகுதியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மிகவும் உற்சாகமாக நடைபெற்று வந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள், டி.ஜே இசையின் துள்ளலான பாடல்களுக்கு ஏற் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் சிலையை நீர்நிலையை நோக்கி எடுத்துச் சென்றனர்.

இந்தக் கொண்டாட்டத்தின் நடுவே, கக்கர்லமுடி ஏசு (48) என்ற நபர் இசையின் தாளத்திற்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு கூடி இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

   

https://twitter.com/TV9Telugu/status/2101556273858916405/video/1

   

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விநாயகர் விசர்ஜன விழாவில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.