ஹைதராபாத்தில் உள்ள சந்தோஷ் நகர் எல்லைக்குட்பட்ட ஐ.எஸ். சதன் எக்ஸ் ரோட்ஸ் பகுதியில் சோகமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. மொஹியுதீன் என்பவர் தனது குடும்பத்தினருடன் உணவகம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
அப்போது அப் பகுதி வழியே அதிவேகமாக வந்த ஒரு காரை ஓட்டிவந்த நபர், மொஹியுதீனின் 3 வயது மகனான இஜ்னான் உத்தீன் மீது மோதிவிட்டு விபத்தை ஏற்படுத்திய காரோடு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
https://twitter.com/TeluguScribe/status/2101532440170827904/video/1
படுகாயமடைந்த அச் சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய வாகனத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறையினர் சிறுவனின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
