அம்மா கதவை திறங்க… பயமா இருக்கு… காரில் விளையாடிய 4 வயது சிறுமி… மூச்சுத்திணறி பரிதாப பலி… கதறி அழுத பெற்றோர்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

By Swetha on புரட்டாதி 21, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலத்தைச் சேர்ந்த வினோபாநகர் பஞ்சாயத்து தலைவரின் மூத்த மகள் தான்விதா ஸ்ரீ (4). ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சிறுமி வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில், காலையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவைத் திறந்து சிறுமி உள்ளே ஏறி விளையாடியுள்ளார்.

சிறிது நேரத்தில் சிறுமியைக் காணாததால் பதற்றமடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் கிராமம் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் சந்தேகமடைந்து காரை ஆய்வு செய்தபோது, முன் இருக்கையின் அடியில் சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காரின் கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் வெளியே வர முடியாமல், மூச்சுத்திணறி சிறுமி மயக்கமடைந்தது தெரியவந்தது.

   

https://twitter.com/pulsenewsbreak/status/2101674492338860525/video/1

   

உடனடியாக சிறுமியை மீட்டு ஜூலூருபாடுவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமடையவே கொத்தகூடெம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.