ஐயோ கொடுமையே… டாக்ஸிக்காக காத்திருந்த இளைஞர் மீது… பாய்ந்த அதிவேக டிராக்டர் மோதி விபத்து… இரு கால்களும் முறிந்த கொடூரம்… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ…!

By Swetha on புரட்டாதி 21, 2026

Spread the love

ஜான்சி மாவட்டம் சீர்கான் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இளைஞர் ஒருவர் டாக்ஸிக்காகச் சாலையோரம் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மின்சார ரிக்‌ஷாவில் அவர் ஏறி அமர்ந்துள்ளார்.

அவர் அமர்ந்த சிறிது நேரத்திலேயே, பின்னால் அதிவேகமாக வந்த டிராக்டர் ஒன்று, எதிர்பாராதவிதமாக அந்த மின்சார ரிக்‌ஷா மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

   

https://twitter.com/ashishpaswan0/status/2101648379810103548/video/1

   

இந்தக் கொடூர மோதலில் ஈ-ரிக்‌ஷா தலைகீழாகக் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் டாக்ஸிக்காகக் காத்திருந்து ரிக்‌ஷாவில் ஏறிய அந்த இளைஞரின் இரண்டு கால்களும் முறிந்தன.