கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் மருத்துவர் போல நடித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை எழுதியனுப்பிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான அந்த வீடியோவில், அந்த டிரைவர் மருத்துவருக்குரிய இருக்கையில் அமர்ந்து கொண்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் குறைகளைக் கேட்டு அவர்களுக்குப் பரிந்துரைச் சீட்டில் மருந்துகளை எழுதுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவர்கள் அங்கு இல்லாத நேரத்தில், இவர் தன்னிச்சையாக இந்த காரியத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
https://twitter.com/gaurav3vedi/status/2100462880256934280/video/1
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். நோயாளிகளின் உயிரோடு விளையாடும் வகையில் செயல்பட்ட அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மீது கடுமையான துறைரீதியான மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
