தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது முதல் மனைவி, இரு மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் சேர்ந்து ஆட்டுக்கல்லால் அவரது தலையில் பலமாக அடித்து கொடூரமாகக் கொலை செய்தனர். இன்று காலை உடலைப் பார்த்த உறவினர்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பால்னாரி தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்ததும், இதன் காரணமாக முதல் மனைவி குடும்பத்தினருடன் ஏற்பட்ட சொத்துத் தகராறு மற்றும் குடும்பச் சண்டைகளுமே இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கப் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
