கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சகலேஷ்பூர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் 23 வயதான வர்ஷா என்ற பெண் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகக் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா வந்து தங்கியிருந்தார்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி, வர்ஷா குளிப்பதற்காக அறைக்குள் செல்வதற்கு முன் ஒரு சாக்லேட்டை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு விட்டு குளியலறைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக வர்ஷா திடீரென மயங்கி கீழே விழுந்து சுருண்டு இறந்துபோனார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வர்ஷாவின் உடலில் எவ்வித வெளிக்காயங்களும் இல்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சாக்லேட்டில் ஏதேனும் விஷத்தன்மை இருந்ததா அல்லது திடீர் மாரடைப்பா என்ற கோணத்தில் சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
