லக்னோ பிஜிஐ பிருந்தாவன் யோஜனா பகுதியில் உள்ள ஏ.எல்.எஸ் அகாடமி பள்ளியில், நர்சரி படிக்கும் 5 வயது சிறுவன் சக மாணவியால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை வகுப்பறையில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், அந்த வகுப்பின் பெண் மானிட்டர் அச்சிறுவனை சுமார் 12 நிமிடங்கள் தொடர்ந்து கன்னத்தில் அறைந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரமான தாக்குதல் அனைத்தும் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலால் சிறுவனின் முகம் மற்றும் கன்னங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, அவனது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, உடனடியாக பிஜிஐ அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
https://twitter.com/ImranTG1/status/2077849452870762608/photo/1
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. சக மாணவனை மிகக் கொடூரமாக தாக்கிய அந்த மானிட்டர் மாணவியை பள்ளியை விட்டு நீக்கி (Expel) நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதால், பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் தமிழக அரசியல் களம் கொதிப்படைவது குறைந்தபாடில்லை. குறிப்பாக, தவெக தலைவர் விஜய்யை இலக்கு வைத்து…
டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது வீசப்பட்ட கல் தாக்கி, நான்கு மாதக் கர்ப்பிணியாக இருந்த பெண் காவலருக்குக் கடுமையான…
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர்…
திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்குக் கிடைக்கும் போதிய அங்கீகாரமும், தேசிய அளவிலான போராட்டங்களை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வலிமையான…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் 7,500-க்கும் மேற்பட்ட…
கேரளா காவல் துறை சமூக வலைதளங்களில் சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து…