“அடச்சீ… தவெக பிரமுகரின் பகீர் லீலைகள்…! 50+ பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ… ஜாமினில் வந்து மீண்டும் கைது…? பரபரப்பு சம்பவம்…!”

By Swetha on ஆடி 22, 2026

Spread the love

சேலத்தில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து, கடன் விவகாரத்தில் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் மணிகண்டன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மணிகண்டனின் செல்போனை ஆய்வு செய்த போது, அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடன் வாங்கிய காரணத்திற்காகப் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கிலும், பெண்களைத் தன் வசப்படுத்தி ஆபாசப் படங்கள் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்களிலும் இவருக்குத் தொடர்பு இருப்பது போலிஸாரின் தீவிர விசாரணையில் அம்பலமானது. சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சின்னப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

   

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மணிகண்டன் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கடும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். குற்றத்தில் ஈடுபட்ட நபருக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.