ஆகஸ்ட் 5-ல் காத்திருக்கும் பெரிய சம்பவம்…! காலிப்பணியிடங்கள் குறித்து மெகா அறிவிப்பு…? பட்ஜெட்டில் கெத்து காட்டப்போகும் தவெக அரசு …!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் விரைவாக நிரப்புவது தொடர்பாக, முதலமைச்சர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக அரசுத் துறைகள் காலிப் பணியிடப் பட்டியலைத் தாமதமாக வழங்குவதால், இந்த முறையை வேகப்படுத்த அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தேர்வுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் அரசுப் பணி கனவை நனவாக்கும் வகையில் இந்நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், இக்காலிப் பணியிடங்கள் குறித்து அரசாங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுத் துறைகளின் துல்லியமானத் தரவுகளைச் சேகரித்து கூடுதல் பணியிடங்களை அறிவிக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனால், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் உருவெடுத்துள்ளது.