திமுக ஆட்சிக்காலத்தில் முக்கியத் துறைகளில் நடைபெற்ற டெண்டர்களில், பினாமிகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதுகுறித்து ரகசியமாக ஆய்வு செய்ய தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இந்த முறைகேடுகள் தொடர்பான அனைத்துப் புள்ளிவிவரங்களையும் திரட்டி, வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான திமுகவை முற்றிலுமாக முடக்குவதே இந்த ரகசியக் குழுக்களின் முக்கிய நோக்கமாகும். தங்களுக்கு எதிராகத் திரட்டப்பட்டு வரும் இந்த ஆதாரங்கள் மற்றும் முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக திமுக தலைமை கடும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளதாகத் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
