கேக் மற்றும் பரிசுகளுடன் வந்த பெற்றோருக்குக் காத்திருந்த ஷாக்…! ஜன்னல் வழியே குதித்து இரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்… கூலாக பதில் சொன்ன மகள்… ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரைச் சேர்ந்த பெற்றோர், பல்கலைக்கழக விடுதியில் படிக்கும் தங்களது 23 வயது மகளுக்குப் பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்கச் சென்ற இடத்தில் நடந்த பகீர் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

லவ்லி புரஃபெஷனல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது 23 வயது மகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூற, பெற்றோர் மற்றும் சகோதரன் ஆகியோர் தகவல்களின்றி சர்ப்ரைஸாக அவரது அறைக்குச் சென்றுள்ளனர். கதவைத் தட்டியும் சுமார் 15 நிமிடங்களாகக் கதவு திறக்கப்படாத நிலையில், இறுதியாகக் கதவைத் திறந்த அந்த மாணவி “நான் உள்ளே படித்துக் கொண்டிருந்தேன்” எனச் அமைதியாகக் கூறியுள்ளார்.

   

ஆனால், அதே நேரத்தில் பக்கத்து அறையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓடிவந்து, “உங்கள் அறையின் பின்புற ஜன்னல் வழியே ஒருவர் கீழே குதித்துள்ளார், அவரது தலையிலிருந்து ரத்தம் வழிகிறது” எனக் கூறியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கேக் மற்றும் பரிசுகளுடன் வந்த பெற்றோருக்கு இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் செய்திகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதங்களை உருவாக்கி வருகிறது.