பண்டிகையில் மர்மம்…! புதுப்பெண் இருந்த கோலம்… கதறி அழுத பெற்றோர்…. விஷம் கொடுத்தாங்களா…? பரபரப்பு குற்றச்சாட்டு…!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான பெண் ஒருவர் கர்வா சௌத் பண்டிகை நாளில் தூக்கில் தொங்கிய நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரோசாபாத் மாவட்டம் நர்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உருதாவ் பஹாட்பூர் கிராமத்தில், 22 வயதான காஜல் என்ற புதுப்பெண்ணின் உடல் வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. தகவலறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித் துடித்த நிலையில், காஜலின் கணவர் கிருபால் சிங் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகப் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

   

மேலும், தனது மகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டுத் தூக்கில் தொங்கவிட்டதாகக் காஜலின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த நர்கி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் எனக் கூறியுள்ள காவல்துறையினர், வரதட்சணைக் கொடுமை புகார்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.