இது காஜு கட்லியா?… இல்லை விஷமா?… பிரபல கடையில் அதிர்ச்சி… சோஷியல் மீடியாவில் கொந்தளிக்கும் மக்கள்… மும்பையில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 3, 2026

Spread the love

மும்பையின் சர்னி ரோடில் உள்ள புகழ்பெற்ற ‘திவாரி பிராஸர்ஸ்’ இனிப்புப் கடையில் வாங்கப்பட்ட ‘காஜு கட்லி’ இனிப்பில், துருப்பிடித்த இரும்பு பின் ஒன்று கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிப்பை உண்ண முயன்றபோது இந்த ஆபத்தான உலோகம் இருப்பதை வாடிக்கையாளர் கவனித்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பும் உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சமும் எழுந்துள்ளது. பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிகம் நம்பி வாங்கும் முன்னணி கடைகளிலேயே இதுபோன்ற அலட்சியம் நடப்பது, இனிப்புகள் தயாரிக்கப்படும் இடங்களின் சுகாதாரம் மற்றும் தரக் கட்டுப்பாடு குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

   

https://www.instagram.com/reel/DbffHfvo3GW/?utm_source=ig_web_button_share_sheet

   

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் உணவு நிர்வாகத் துறையினர் சம்பந்தப்பட்ட கடை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இத்தகைய உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களைத் தடுக்க கடைகளில் கடுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.