தமிழ் சின்னத்திரையை பொருத்தவரையில் மக்களுக்கு மனம் கவர்ந்த சேனலாக சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய சீரியல்கள் உள்ள நிலையில் அந்த சேனல்களுக்கு போட்டியாக கலைஞர் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்களிலும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மக்களை கவரும் வகையில் கதைக்களத்தை உருவாக்கி சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தொடர்ந்து புதுப்புது சீரியல்களை அனைத்து டிவி சேனல்களும் களமிறக்கி கொண்டிருக்கும் நிலையில் கலைஞர் டிவியில் விரைவில் மீனாட்சி சுந்தரம் என்ற புதிய சீரியல் வரவுள்ளது.
அதில் நடிகர் எஸ்வி சேகர் தன்னைவிட 30 வயது குறைவான இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வது போல சீரியல் தொடர்பாக வெளியான ப்ரோமோவில் காட்டப்பட்டிருந்தது. இந்த ப்ரோமோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக எஸ் வி சேகரை திருமணம் செய்து கொள்ளும் பெண் ரோலில் நடித்திருக்கும் முத்தழகு சீரியல் பிரபலம் சோபனா எப்படி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சோபனா. தற்போது அவர் மீனாட்சி சுந்தரம் சீரியலில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில் தன்னைவிட வயது அதிகமான நடிகருக்கு ஜோடியாக நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், மீனாட்சி சுந்தரம் ஒரு சர்ச்சையான கதை தான்.
ஆனால் நடிப்பில் Explore செய்யலாமா என ஒப்புக்கொண்டேன். ஒரே விதமான ரோலில் நடிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. நமக்கு பிடித்த மாதிரி பலவிதமான ரோல்களிலும் நடிக்கலாம். எப்படி நடித்தாலும் கொஞ்சம் பேர் நெகட்டிவ் ஆகத்தான் பேசப்போகிறார்கள். அப்படி நெகடிவ் வந்தாலும் வாங்கிக் கொள்ளலாம் தப்பு இல்லை. அந்த ப்ரோமோவை பார்த்துவிட்டு என்னுடைய நண்பர்கள் கூட அதிர்ச்சியாகி விட்டார்கள். முன்பு நடு என சொன்னவர்கள் கூட இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் என்று ஷோபனா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…