சினிமாவை பொறுத்தவரையில் ஒரு சில திரைப்படங்கள் என்டர்டைன்மென்ட் என்பதையும் கடந்து மனதில் ஆழமாக பதிந்து விடும். எத்தனை காலங்களைக் கடந்தாலும் அவை ஒரு அழுத்தமான உணர்வை ஒவ்வொரு முறையும் கடத்தி செல்லும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான், ராஜுவ் மேனன் என மூன்று மாபெரும் கலைஞர்களின் கூட்டணியில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான பம்பாய் திரைப்படம். மணிரத்தினத்தின் அக்மார்க் படைப்பான இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மதவாத பிரச்சனைகள், மதம் கடந்த காதலை தைரியமாக கையில் எடுத்து மணிரத்தினம் இயக்கிய இந்த திரைப்படம் இன்று வரை பார்வையாளர்களை அதிகமாக பாதித்தது. அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா இருவரும் அவர்களின் காதலால் கண்களின் மூலம் உயிருக்குள் புகுந்து ஆர்ப்பரித்தனர். இந்தத் திரைப்படம் பல வருடங்கள் கடந்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பம்பாய் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜுவ் மேனன் இன்று அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது சிரமமாக இருக்கும் என்று சமீபத்திய யூடியூப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பம்பாய் திரைப்படம் வெளியாகி 3 தசாப்தங்களில் இந்தியா சகிப்புத்தன்மை குறைந்த நாடாக மாறிவிட்டது. பம்பாய் போன்ற ஒரு படத்தை இன்று எடுக்க முடியாது. இந்தியாவின் நிலமை மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. மக்கள் மிகவும் கடினமான நிலைப்பாடுகளை எடுக்கின்றன. மதம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாகி விட்டது. பம்பாய் போன்ற ஒரு படத்தை எடுத்து திரையரங்கில் வெளியிட்டு திரையரங்கு எரிக்கப்படாது என்று எதிர்பார்க்க முடியாது என நான் நினைக்கிறேன். இந்த 25 முதல் 30 ஆண்டுகளில் இந்தியா குறைவான சகிப்புத்தன்மை கொண்ட நாடாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் 55 வயதான ஜெயபாலகிருஷ்ணன் என்ற நபர் பரிதாபமாக…
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…
நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட…
தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சியின் தலைமை மீதும் அண்மையில் பொறுப்புக்கு வந்த…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச்…