யார் இந்த DIGITAL கஜினி முகமது..? 17 முறை தோல்வி.. ஆனால், இன்று 4000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்..

By John

Updated on:

Share chat

வரலாற்றில் நாம் கஜினி முகமதுவைப் பற்றி படித்திருப்போம். இந்தியாவைக்  கைப்பற்றுவதற்காக 17 முறை படையெடுத்து 18-வது முறை வெற்றி கண்டவர். வாழ்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு கஜினி முகமது படையெடுப்பு ஓர் மிகச் சிறந்த உதாரணம். பண்டைய காலத்தில் கஜினி முகமது செய்ததைப் போலவே இந்த டிஜிட்டல் யுகத்திலும் 17 முறை தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி அதில் தோல்வியுற்று அவமானங்களையும் பாடங்களாகக் கற்று தன்னுடைய 18 வது முயற்சியில் வெற்றி பெற்று இன்று டிஜிட்டல் கஜினி முகமதுவாகத் திகழ்பவர்தான் ஷேர்சாட் தலைமச் நிர்வாக அதிகாரி அங்குஷ்.

ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்து வந்த பேஸ்புக்கை பலரும் பயன்படுத்த திணறி வந்த வேளையில் முதன் முதலாக உள்ளுர் மொழிகளில் அரட்டை, சமூக வலைளத்தை ஆரம்பித்து இன்று அதில வெற்றியும் பெற்றிருக்கிறார்.

   
share chat
Sharechat image

ஷேர்சாட் பெங்களூரில் தலைமையகம் உள்ளது மற்றும் அங்குஷ் சச்தேவா அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். ஷேர்சாட் 15 இந்திய மொழிகளில் 350 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது. தற்போது ஷேர்சாட்டில் 2500க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியாற்றி வருகின்றனர். ஷேர்சாட்டின் நிறுவனர் அங்குஷ் சச்தேவா, இன்று பரவலாக அறியப்படும் பெயராக இருப்பினும், அவர் அதை ஆரம்பிப்பதற்கு முன் 17 முறை தோல்வியடைக்கிறார்.

F5RYM LaEAAYIKE

ஆங்கில மொழியின் சிக்கலான காரணத்தால் பேஸ்புக் மற்றும் பிற தளங்கள் பயனர்களுக்கு சவாலாக இருந்தபோது பயனர்களை இணைக்க உதவும் உள்ளூர் மொழி சமூக ஊடக தளத்தின் தேவையை அங்குஷ் சச்தேவா யோசிக்க விழுந்த விதைதான் ஷேர்ஷாட் என்னும் நிறுவனத்தின் வெற்றி கிடைத்தது.

அங்குஷ் சச்தேவா சோமர்வில் பள்ளியில் தனது மூத்த மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார், பின்னர் 2011 இல் ஐஐடி கான்பூரில் சேர்ந்தார். அப்போது அவர் கணினி அறிவியலில் இளங்கலை தொழில்நுட்பம் (பி.டெக்.) பயின்றார். படிப்பு முடித்த பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சொந்தத் தொழில் ஆரம்பிப்பதற்காக 17 ஸ்டார்ட்அப்களைத் தொடங்கினார், ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்தன.

Moj
moj

இந்தியாவின் டாப் 7 கோவில்கள்.. விண்ணை முட்டும் வருமானம்.. மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு..!

விடாது மனம் தளராமல் 18வது முயற்சியாக, அங்குஷ் சச்தேவா, தனது நண்பர்களான ஃபரித் அஹ்சன் மற்றும் பானு சிங் ஆகியோருடன், அக்டோபர் 2015 இல் தொடங்கப்பட்ட ஷேர்சாட் செயலியை ஆரம்பித்தார். தற்போது இந்த தளம், தற்போது, ​​இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ், பெங்காலி, ஒடியா, கன்னடம், அஸ்ஸாமி, ஹரியான்வி, ராஜஸ்தானி, போஜ்புரி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் கிடைக்கிறது.

1655440652 43d85bdcbaa96f54db462c1a32b3cb07 v1655440652 xlarge

இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம்.. உயிரிழப்புக்கான காரணம் இது தானா.. அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகினர்..

ஷேர்சாட்டின், தற்போதைய நிலவரப்படி, சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்புடையது, இது ரூ. 40,000 கோடிக்கும் அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கு அங்குஷ் சத்தேவாவின் வாழ்க்கைப் பாடம் ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். எதற்கும் மனம் தளர விடாமல் குறிக்கோள் ஒன்றை நோக்கியே நமது பயணம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஷேர் ஷாட் அங்குஷ் கச்தேவாவின் கதையே போதும்.