இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம்.. உயிரிழப்புக்கான காரணம் இது தானா.. அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகினர்..

By Mahalakshmi

Published on:

உலகையே தன் இசை மூலம் மயங்கசெய்யும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் திடீர்  இறப்பு திரையுலகினார்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரணி  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு   வந்த நிலையில் சற்றுமுன்  காலமானார்.

   

ஆயுர்வேத சிகிச்சை பலனின்றி  இவர்  இலங்கையில் காலமானார். 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இன்று மாலை 5 20 மணிக்கு மரணம் அடைந்தார் . நாளை மாலை அவரின் உடல் சென்னை வருகிறது. பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிய நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இசையமைப்பாளர் பவதாரணி, இளையராஜவின் மகள்,  யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி என்ற அடைமொழியில் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். ஆனால், இவரது குரல் மிகவும் வித்யாசமானதாக இருக்கும் என்பதால்  இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய “மயில்போல பொண்ணு ஒண்ணு” பாடலை பாடினார். இதற்காக இவருக்கு “சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது” கிடைத்தது.

ராசய்யா படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் வெளியான பாடல்களையே  பாடியுள்ளார்.  மேலும் , இவர் தேவா, சிற்பி ஆகியோர் இசைக்கும்  பாடியுள்ளார். இவர் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு படயுலகில் நுழைந்தார்.

இவர் ரேவதி இயக்கிய பிர் மிலேங்கே படத்திற்கும் இசையமைத்தார். இவர் வெள்ளிச்சி என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் வாங்கினார். இவர் விளம்பர நிறுவன நிர்வாகியான சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் படு ஹிட்டாகி மக்கள் மனதில் இன்றும் பாடப்படும் பாடலாக இருக்கிறது. மேலும் இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டான நிலையில் இதில்  குறிப்பாக, உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த படத்தில் ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா என்ற பாடலையும் பாடியுள்ளார்.  வித்யாசமான குரல் வளம் கொண்ட பாடகி பவதாரணி, அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

bhavatharini
author avatar
Mahalakshmi