தற்கொலை செய்து கொள்வேன் என கூறி என்னை திருமணம் செய்தார்.. ஆனால்… பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை ஷாந்தி..

By Deepika

Updated on:

வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த சாந்தி வில்லியம்ஸ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் மெட்டி ஒலி சீரியலில் ராஜம்மாவாக பலருடைய மனம் கவர்ந்திருந்தார். அதுபோல சாந்தி வில்லியம்ஸின் கணவர் வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளர் தான்.

   

இவர்கள் இருவருக்கும் அதிகமான வயது வித்தியாசத்தில் தான் திருமணம் நடந்திருக்கிறது. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்த ஒரு திரைப்படத்தில் சாந்தி நடித்துக் கொண்டு இருந்தபோது வில்லியம்ஸ் அவரை காதலித்திருக்கிறார். பிறகு நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்று மிரட்டி சாந்தியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இதுகுறித்து மனம் திறந்துள்ளார் சாந்தி வில்லியம்ஸ், அவர் கூறியுள்ளதாவது, “வில்லியம்ஸ் தான் என்னை வந்து சந்தித்தார். நெஞ்சத்தை கிள்ளாதே ஷூட்டிங் காலத்தில் தான் வந்து சந்தித்தார். நான் ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தேன். என்னோட அப்பா வந்து மலையாளத்தில் இருந்து இயக்குநர் வந்திருக்கிறார். பார்ப்பதற்கு பைத்தியக்காரன் மாதிரி இருக்கிறான் என சொன்னார். என்னால் பண்ண முடியாது என வில்லியம்ஸை பார்க்காமலே சொல்லி விட்டேன்.

ஆனால் அவர் என்னை பார்த்தே ஆகவேண்டும் என சொல்லவும், நேரில் வந்து என்னால் நடிக்க முடியாது என நேரிலும் கூறினேன். அவரோ நாளைக்கு ஷூட்டிங் வர வேண்டும் என சொல்லி பணத்தை வைத்து விட்டு போய்விட்டார். சரி என நானும் மறுநாள் ஷூட்டிங் சென்றேன். செட்டுக்குள் வில்லியம்ஸ் கிரேன் மேல் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். என்னுடைய மேக்கப் மேன் அவர் பெரிய கேமராமேன் என சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் இவர் என்ன பைத்தியமா என கேட்டேன். வில்லியம்ஸ் கீழே வந்து நான் ஒன்னும் பைத்தியம் இல்லை என சொல்லிவிட்டு சென்றார். நினைத்த மாதிரி குறிப்பிட்ட நேரத்துக்குள் காட்சியை முடிக்க முடியவில்லை. எனக்கு அன்றைக்கு வேறு ஒரு மீட்டிங் ஒன்றும் இருந்தது. நான் கிளம்பும்போது எங்க அப்பாவிடம் இருந்து போன் நம்பர் வாங்கி விட்டார். தினமும் அவரிடம் பேசி வில்லியம்ஸை மயக்கி விட்டார். ஒருநாள் வந்து அப்பா வில்லியம்ஸை திருமணம் செய்ய விருப்பப்படுவது பற்றி பேசினார். நான் பைத்தியக்காரன் மாதிரி இருக்கான் என சொல்லி மறுத்து விட்டேன்.

நான் சம்மதிக்கவில்லை என்றால் அவர் பாம்ப்குரோவ் ஹோட்டல் மாடியில் இருந்து கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார். நான் செத்தாலும் பண்ண மாட்டேன் என சொன்னேன். இப்போதைக்கு சொல்லிக்கிறேன் என அப்பா சொன்னதும் எதுவும் சொல்லாமல் விட்டுட்டேன். மறுநாள் வீட்டுக்கு வந்தார். ஆனால் அவரின் உருவம், செயல்முறை எதுவும் வில்லியம்ஸை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை.

நான் வீட்டை விட்டு ஓடிப்போய் விடுவேன் என மிரட்டினேன். எங்க அப்பாவும், அம்மாவும் அவருக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள். என்னுடைய அக்காவிடம் சொன்னதும் அவர் திருமணம் செய்து வைக்க முடியாது என சொல்லிவிட்டார். ஆனால் எப்படியோ திருமணம் உறுதியாகி விட்டது. அப்போது நான் நெஞ்சத்தை கிள்ளாதே படம் பண்ணிக் கொண்டிருந்தேன். மகேந்திரன் சாரிடம் சொன்னேன். பின்னால் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சரத்பாபு வில்லியம்ஸ் நல்ல பையன் என சொன்னார். பின்னர் மகேந்திரன் சார் நேரில் அவரை பார்த்து பேசினார். இதனைத் தொடர்ந்து வில்லியம்ஸ் என்னை பார்த்து பேசினார்.

என்னோட மனைவி விட்டுவிட்டு போய்விட்டார். அதனால் உன்னை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறேன். சினிமாத்துறையில் குடும்ப பெண்ணாக இருக்கிறாய், உன்னைப் பற்றி எந்த தவறான கருத்தும் வந்ததில்லை என்பதால் திருமணம் செய்ய நினைக்கிறேன் என சொன்னதும் நானும் மனமிறங்கி விட்டேன். ஆனால் திரும்பவும் வில்லியம்ஸ் பேச்சால் நான் கல்யாணம் அன்னைக்கு ஓடிவிட்டேன்.

கேரளாவில் தான் நிகழ்ச்சி நடந்தது. மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கோயிலுக்கு சென்ற சமயத்தில் நான் அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் மலை மீது இருந்த அத்தை வீட்டுக்கு பின்னால் உட்கார்ந்து விட்டேன். அத்தையும் அப்பாவிடம் சண்டை போட்டார். ஆனால் என்னை தரதரவென்று இழுத்து கொண்டு போய் அவர் என்னை வில்லியம்ஸூக்கு திருமணம் செய்து வைத்தார்” என சாந்தி வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

 

author avatar
Deepika