அட கடவுளே.. கல்யாணம் ஆகி இவ்ளோ நாள் ஆச்சு, இப்பதான் இதையே பண்றிங்களா..! ரெடின் – சங்கீதா வெளியிட்ட வீடியோ வைரல்..

By Ranjith Kumar

Updated on:

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. இவர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் அவரின் தோழியாக நடித்த இளசுகளை வெகுவாக கவர்ந்தார். இவர் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


அந்த திரைப்படத்தில் கிளாமர் குறைவாக இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி என்று பதிந்து விட்டார்.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். வெள்ளித்திரை , சின்னத்திரை என பிசியாக தற்பொழுது நடித்து வருகிறார்.

   


திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் இவர் இணையத்தில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது நடிகை சங்கீதாவிற்கும், தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் சத்தமில்லாமல் திருமணம் நடந்து முடிந்துள்ளது . நடிகர் ரெடின் கிங்ஸ்லி ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்  இதன்பின் இவருக்கு A1 மற்றும் டாக்டர் திரைப்படங்கள் இன்னும் அதிக அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.

இதை தொடர்ந்து பீஸ்ட், ஜெயிலர், DD Returns போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது தான் திருமணம் நடந்து முடிந்தது அப்புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வைரலாகி வந்தது. கடந்தாண்டு டிசம்பர் 10ஆம் தேதி முடிந்த இவர்களின் கல்யாணத்தை தற்போது தான் மேரேஜ் ரிஜிஸ்டர் செய்து இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது போல் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

author avatar
Ranjith Kumar