நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் இயக்கிய சிவாஜி, எந்திரன், ரோபோ 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பு ஒரு காலகட்டத்தில், ரஜினிகாந்த் என் வீட்டுக்கு வாசலுக்கே வந்து கேட்டாலும் அவருக்கு நான் படம் பண்ண மாட்டேன் என, இயக்குநர் ஷங்கர் சொன்ன தகவல் வெளியாகி உள்ளது. இதை ஏவிஎம் சரவணன் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஒருமுறை ரஜினியும் நானும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது பெரிய அளவில் கமர்ஷியலாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ரஜினியிடம், இயக்குநர் ஷங்கரை வைத்து ஒரு படம் பண்ணலாம் என நான் சொன்னேன். அவர் எனக்கு படம் பண்ண மாட்டார் என்றார். ஏன் என்று நான் கேட்டதற்கு அவர் ஒரு கதையை ஆறு மாதங்களாக எனக்கு தயார் செய்தார். ஆனால் அந்த கதையில் நான் நடிக்கவில்லை. அதனால் கோபத்தில், ரஜினியே என் வீட்டு வாசலுக்கு வந்து கேட்டாலும் படம் பண்ண மாட்டேன் என்று வைரமுத்துவிடம் கூறியிருக்கிறார். இதை வைரமுத்து என்னிடம் பேசும்போது கூறினார், என்றார்.
நீங்கள் ஏன் அவரிடம் பேசுகிறீர்கள். ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நான் இயக்குநர் ஷங்கரிடம் பேசி சம்மதம் வாங்குகிறேன். அவர் விரும்பினால் செய்யட்டும், இல்லை என்றால் வேண்டாம் என்றேன். அடுத்த நாள் இவருக்கும் 1001 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து படத்தை உறுதி செய்தேன் என ஒரு நேர்காணலில் ஏவிஎம் சரவணன் கூறியிருக்கிறார். ரஜினியே வந்து கேட்டாலும் படம் பண்ண மாட்டேன் என மறுத்து பேசிய இயக்குநர் ஷங்கர், ஏவிஎம் என்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமே வந்த கேட்டபின்பு மறுக்காமல் ஒத்துக்கொண்ட படம்தான் சிவாஜி. அந்த படம் மாஸ்ஹிட் வெற்றி படமாக ரஜினிக்கும், ஷங்கருக்கும் அமைந்தது.
மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…
சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…
சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…