Categories: சினிமா

ஷங்கரின் முதல்வன் படத்தை தோல்விப் படமாக்க இந்த சதியெல்லாம் நடந்ததா?.. வியக்கவைக்கும் சம்பவங்கள்!

Spread the love

தமிழ் சினிமாவின் வியாபார எல்லையைப் பெருக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் அவரது முந்தையப் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.

அதிலும் இந்தியன் 2 திரைப்படம் கடுமையான கேலிகளுக்கு ஆளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அந்த படத்தை அக்குவேறு, ஆணிவேராகக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் ஷங்கர் தன்னுடைய படங்களில் ஊழல் எனும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இயக்குனர் ஷங்கரின் வெற்றிக்கு சுஜாதா ஒரு முக்கியக் காரணியாக இருந்தார். அவர் படத்துக்கு சுஜாதா இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன் மற்றும் சிவாஜி என தொடர்ந்து பணியாற்றினார். டைட்டிலில் சுஜாதா வசனம் என்று மட்டும் வந்தாலும், அவர் எல்லா படங்களிலும் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த படங்களில் வசனங்கள் கனக்கச்சிதமாக இருக்கும். இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றிய படம் என்றால் அது ரஜினி நடித்த எந்திரன் படம்தான். அதன் பின்னர் ஷங்கர் தடுமாறி வருகிறார் என்பது கண்கூடு.

ஷங்கர் இயக்குனராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறியப் படம் என்றால் அது முதல்வன் திரைப்படம்தான். அந்த படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டார் ஷங்கர். அந்த படத்தில் ரகுவரன் நடித்திருந்த முதல்வர் கதாபாத்திரம் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியைதான் குறிப்பிடுகிறது என விமர்சனங்கள் எழுந்தன. அதனால் கருணாநிதி ஆதரவாளர்கள் அந்த படத்தின் மேல் கோபத்தில் இருந்துள்ளனர்.

அதனால் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்த படத்தை மதுரையில் லோக்கல் கேபிள் சேனலில் ஓடவிட்டார்களாம். அதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என நினைத்துள்ளனர். இதை செய்தது கருணாநிதியின் ஆதரவாளர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இதைத் தாண்டியும் அந்த படம் வெற்றிப்படமாகவே அமைந்தது.

vinoth

Recent Posts

“திமுக, அதிமுகவுக்கு வன்னி அரசு கொடுத்த மரண மாஸ் பதிலடி”…. நேரில் அழைத்து விஜய் செய்த காரியம்…. அதிர்ந்துபோன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…

2 minutes ago

“நம்ம பெப்ஸி உமாவா இது?.. இத்தனை வருசமா எங்க இருந்தாங்க?”… வைரலாகும் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த 90s கிட்ஸ்…!

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…

9 minutes ago

ஒரே நாளில் ரூ.5.77 லட்சம் கோடி அவுட்… கரடியின் பிடியில் சிக்கிய இந்தியப் பங்குச்சந்தை… முதலீட்டாளர்கள் அதிர்ச்சி… பங்குச்சந்தையை நிலைகுலைய வைத்த ‘ஏஐ’ புயல்….!

பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…

17 minutes ago

“அப்பா, அம்மா, தங்கை”…. ஒரே குடும்பத்தில் 3 பேர் கொடூரக் கொலை… குளியலறையை கழுவிய மகள்… பெங்களூருவில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் துரோகம்….!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…

25 minutes ago

“அந்த பேரு கூட பொய் தான்..” இன்ஃப்ளூயன்சர் பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய கொடூரன்… ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை… டெல்லியில் பரபரப்பு…!

இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…

32 minutes ago

“அப்பா என்னை காப்பாத்துங்க…” மரணத்தின் விளிம்பிலிருந்து வந்த அந்த ஒரு போன் கால்… நெஞ்சை பிளக்கும் லக்னோ விபத்தின் சோக சம்பவம்….!

உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…

38 minutes ago