Categories: சினிமா

1000 படம் நடிச்சுட்டு இதக் கூட பண்ணலன்னா எப்படிப்பா… இயக்குனருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மனோரமா!

Spread the love

இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையைப் படைத்தவர் ஆச்சி மனோரமா. 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரின் திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.

தமிழகத்தின் ஐந்து முதல்வர்களோடு இணைந்து நடித்திருந்தாலும் மனோரமா தன்னை எந்த அரசியல் கட்சியுடனும் இணைத்துக் கொள்ளவில்லை. 50 களின் இறுதியில் தொடங்கிய அவரின் திரைவாழ்க்கை 2010 கள் வரை தொடர்ந்தது. கடைசியாக அவர் ஹரி இயக்கிய சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சிலர் சொல்வார்கள் ‘நான் சாகும் வரை நடிக்க வேண்டும்’ என்று, அப்படி நடந்தது  மனோரமாவுக்குதான். 1950 களின் இறுதியில் நடிக்கத் தொடங்கிய மனோரமா தன் இறப்புக்கு முன்பு வரை தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். முதலில் நகைச்சுவை வேடங்களில் மட்டும் நடித்த மனோரமா, அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களுக்கு ஏற்பவும் தன்னை தகவமைத்துக் கொண்டார். அதனால்தான் அவரால் 1500 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.

இந்நிலையில் மனோரமாவின் ஒரு செயலைப் பார்த்து தான் வியந்து போன சம்பவத்தை இயக்குனர் சிம்பு தேவன் பகிர்ந்துள்ளார். அதில் “இம்சை அரசன் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெறும் 10 பக்க வசனத்தை அவரிடம் கொடுத்து  வசனங்களை மனப்பாடம் செய்துகொள்ள டைம் எடுத்துக்கோங்க என சொன்னேன். ஆனால் அவர் கடகடவென இரண்டு முறை படித்துவிட்டு அதை உணர்ச்சிப்பூர்வமாக ஏற்ற இறக்கத்தோடு பேசிக் காட்டினார். அப்படியே மிகப்பிரம்மாதமாக நடித்தும் காட்டினார்.

அவரின் நடிப்பைப் பார்த்து நான் வியந்து போய் நிற்பதைப் பார்த்து “1000 படம் நடிச்சுட்டேன். இது கூட பண்ணலன்னா எப்படிப்பா?” எனக் கேட்டு சாதாரணமாக சிரிச்சாங்க.” எனக் கூறியுள்ளார். இம்சை அரசன் படத்தில் மனோரமா ராஜமாதா கதாபாத்திரத்தில் வடிவேலுவுக்குத் தாயாராக நடித்திருந்தார்.

vinoth

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

3 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

3 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

3 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

3 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

3 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

3 மணத்தியாலங்கள் ago