lyca

விடாமுயற்சியை போலவே Game Changer படத்துக்கும் முட்டுக்கட்டை போட்ட LYCA… ஷங்கரின் நிலைமை இப்படி ஆகிடுச்சே…

By Meena on ஜனவரி 6, 2025

Spread the love

ங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் எஸ் சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். படம் இயக்குவது மட்டுமல்லாமல் எஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ங்கர். இவரது படங்கள் அனைத்தும் தனித்துவமாகவும் பாடல்களின் செட்டெல்லாம் மிகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும். அதனால் இவரை “பிரம்மாண்ட இயக்குனர் ங்கர்” எனவும் மக்கள் அழைக்கின்னர்.

   

1993 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது. அதனால் புகழின் உச்சியில் இருந்தார் ங்கர். 2000 காலகட்டத்திற்கு பிறகு அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், எந்திரன் 2.0, நண்பன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் ராம்சரனை வைத்து Game Changer என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

   

 

இந்நிலையில் சங்கர் சமீபத்தில் இயக்கிய “இந்தியன் 2” திரைப்படம் தோல்வி அடைந்தது .அந்த திரைப்படத்தை தயாரித்தது LYCA நிறுவனம் தான். தற்போது Game Changer திரைப்படத்தை தமிழ்நாட்டில் டிஸ்ட்ரிபியூட் செய்பவர்களும் LYCA நிறுவனம்தான். ஏற்கனவே LYCA விடம் “இந்தியன் 3” படத்தை முடித்துக் கொடுப்பதாக ஷங்கர் கூறியது போல் தெரிகிறது. அதனால் LYCA நிறுவனம் சங்கர் இந்தியன் 3 திரைப்படத்தை முடித்து தர வேண்டும் அப்படி இல்லையேல் அதற்கு முன்பாக Game Changer திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என்று தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டிருக்கிறார்களாம். இதனால் ஷங்கரின் நிலைமை என்ன இப்படி ஆகியிருச்சு என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.