இன்றைய இளம் தலைமுறை குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனத்தோடு இருக்கிறார்கள். எதையும் எளிமையாக கற்றுக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அனைவரையும் அசரவைக்கும் திறமையை அசாத்தியமான செயல்களை செய்கிறார்கள். அந்த வகையில் 10 வயது சிறுமி ஒருவர் சச்சின் டெண்டுல்கர் அவர்களே வியக்கும் அளவிற்கு பவுல் செய்து இருக்கிறார். அவரைப் பற்றி இன் காண்போம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பாஸ்ட் பவுலர் ஜாகிர் கான் ஸ்டம்புக்கு பின்னால் இருந்து ஓடி வந்து குதித்து பந்து வீசும் அவரது தனித்துவமான ஸ்டைலுக்கே பல ரசிகர் பட்டாளங்கள் இருந்தனர். இப்போது அந்த ஜாகிர் கானை போலவே அச்சு அசலாய் பந்து வீசுகிறார் 10 வயது சிறுமி சுசிலா மீனா. அவரின் விடியோவை பார்த்த சச்சின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த சிறுமியை பற்றி பகிர்ந்ததால் உலக அளவில் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் இந்த 10 வயது சிறுமியான சுசிலா மீனா.
ராஜஸ்தானின் பிரதாப்கர் மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் சுசீலா மீனா. இந்த சிறுமி பவுலிங் போடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அந்த வீடியோவை சச்சின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து பாராட்டுகளை கூறியிருந்தார். மேலும் அந்த வீடியோவில், “அடடே இந்த சிறுமி ஜாகீர் கான் உங்களைப் போலவே பந்து வீசுகிறார்” என்று சச்சின் எழுதி பதிவிட்டு இருந்தார். அதற்கு ஜாகிர் கான் அவர்களும், “ஆமாம். நான் ஏற்றுக் கொள்கிறேன் இந்த சிறுமியின் பௌலிங் ஸ்மூத்தாகவும் சுவாரசியமாகவும் உள்ளது” என்று அவரும் பதிலளித்து இருக்கிறார்.

சுசிலா மீனாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவரது பெற்றோர் கூலி வேலை செய்து அவரை அரசு தொடக்கப்பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். வீடியோ வைரலான பிறகு பலர் சுசிலாவின் பெற்றோரை சந்தித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவளை பெரிய ஆளாக ஆக்கிவிட வேண்டும் என்று பெருமிதத்துடன் பேசுகின்றனர் சுசிலா மீனாவின் பெற்றோர். ஆனால் இந்த மாணவிக்கு அரசு சார்பில் எதுவும் செய்யவில்லை என்று ஊர் மக்கள் வேதனையுடன் தெரிவித்து இருக்கின்றனர்.
