தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆரின் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள், திராவிட சிந்தனைகள், ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு மக்கள் கொண்டாடினர். இவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்றே கூறலாம்.
தன்னை ஆதரித்து வெற்றி நாயகனாக ஆக்கிய தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டில் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நல்ல குணம் கொண்ட மனிதர். வாரி வழங்கும் வள்ளல் தன்னை நாடி யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர். தன்னைப்போலவே தன்னை சார்ந்தவர்களும் நலமாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கெல்லாம் ஓடோடி சேர்ந்து உதவுபவர். அப்படி எம்ஜிஆர் ஏன் படிக்கவில்லை படிக்காமல் போனதற்கு காரணம் என்ன என்று ரசிகர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த எம்ஜிஆர் நான் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். என் அம்மாவும் என்னை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் வக்கீலுக்கு நான் படிக்க வேண்டும். அந்த கருப்பு கோட்டில் என்னை பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் எங்களது குடும்ப நிலைமை பசி வயிற்றை கிள்ளியது. அந்த நேரத்தில் செய்வதறியாது தான் நாடக கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தேன் என்று தான் படிக்காமல் போனதற்கான காரணத்தையும் தான் படிக்க விரும்பிய பட்டத்தை பற்றியும் கூறியிருக்கிறார் எம்ஜிஆர்.
