“அம்மாவிடம் கேட்க துணிச்சல் இருந்ததா…?” விஜய்-த்ரிஷா பற்றி பேசுறீங்க…! விஜய் மீதான விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கிய ஷகீலா…!!

By Devi Ramu on சித்திரை 27, 2026

Spread the love

அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு நடிகை ஷகீலா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் த்ரிஷா இடையிலான நட்பைக் கொச்சைப்படுத்துவது தவறானது என்றும், ஒரு திருமண நிகழ்விற்கு அவர்கள் ஒன்றாகச் சென்றதை வைத்துத் தவறாக மதிப்பிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கே யாரும் முழுமையான உத்தமர்கள் இல்லை எனக் கூறிய அவர், திரைத்துறையினரின் சொந்த வாழ்க்கை விவகாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் நாட்டு மக்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளை மட்டுமே கவனிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குத் திருமணம் ஆகவில்லை என்பதற்காக, அவரிடம் யாராவது துணிச்சலாகக் கேள்விகள் கேட்டதுண்டா என ஷகீலா கேள்வி எழுப்பியுள்ளார். குடும்பம் மற்றும் குழந்தைகள் இல்லாத அவரிடம் தாய்மை பற்றிப் பேசத் தகுதி இருக்கிறதா எனக் கேட்க எவருக்கும் தில்லு இருந்ததில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு பக்கம் குடும்ப அரசியல் செய்பவர்களிடம் நாட்டை எப்படிக் காப்பாற்றுவீர்கள் எனக் கேட்க முடியாதவர்கள், விஜய்யின் குடும்ப விவகாரத்தைத் தேவையற்றுப் பெரிதாக்குவதாகவும், மக்களுக்காக உழைக்க வரும் அவரது முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் பேசியுள்ளார்.