கடந்த 2025-ஆம் ஆண்டு சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், வழக்கை ரத்து செய்ய மறுத்து அவரது மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் இந்த அதிரடி முடிவு, சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டு வரும் பொன்முடிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படும் வேளையில், இந்த விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
