குழந்தைகளைச் சீரழித்து வீடியோ எடுத்த காமக்கொடூரன்… நண்பர் கொடுத்த ரகசியத் தகவல்… வெளிச்சத்திற்கு வந்த அப்துல் ரசாக்கின் வக்கிரம்..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரில், பிற மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சிறுமிகள் தங்கியிருந்த முகாமிலேயே சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த அப்துல் ரசாக் (38) என்பவர், குழந்தைகளைச் சீரழித்ததோடு நில்லாமல், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டியும் வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பர் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குழந்தைகள் நலக் குழுவினர் நடத்திய விரிவான விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்துல் ரசாக்கை அதிரடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.