ஜாம்பி போல மாறிய மனிதன்.. மணிக்கணக்கில் அசைவின்றி நின்ற அதிர்ச்சி… உயிரைக் குடிக்கும் ‘சைலாசின்’ போதை… அதிரவைக்கும் பின்னணி..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

சண்டிகரைத் தொடர்ந்து, பெங்களூருவிலும் ‘ஜாம்பி டிரக்’ (Zombie Drug) போதைப் பொருள் பயன்பாடு குறித்த சந்தேகத்தை எழுப்பும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் பொது இடத்தில் எவ்வித அசைவும் இன்றி, ஒரு சிலையப் போல பல மணி நேரம் நின்றுகொண்டிருப்பது பதிவாகியுள்ளது. பார்ப்பதற்கு ஒரு ஜாம்பியைப் போலவே தோற்றமளிக்கும் அந்த நபரின் வினோதமான செயல், அப்பகுதியில் சென்றவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ‘சைலாசின்’ (Xylazine) அல்லது ஜாம்பி டிரக் எனப்படும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்கள், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வின்றி நீண்ட நேரம் சிலையாய் உறைந்து போவார்கள். தற்போது பெங்களூருவிலும் இது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது, இந்தியாவில் இந்த அபாயகரமான போதைப் புழக்கம் அதிகரித்து வருகிறதோ என்ற அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.