உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், பெண் காவலர் ஒருவருக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பணியாற்றும் பெண் காவலர் மேனகா சௌகான், தனது காவல் நிலைய அதிகாரியான (SO) தினேஷ் சந்திர சௌத்ரி மீது மிகக் கடுமையான புகார்களை முன்வைத்துள்ளார். உடல்நலம் குன்றியிருக்கும் தனது தாயைக் கவனித்துக்கொள்ள விடுப்பு கோரியபோது, அதற்குப் பதிலாக அந்த அதிகாரி பாலியல் ரீதியான நிபந்தனைகளை விதித்ததாக மேனகா குற்றம் சாட்டியுள்ளார்.
விடுப்பு வழங்க வேண்டுமானால் தன்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என அந்த அதிகாரி வற்புறுத்தியதாகவும், தனிப்பட்ட தொலைபேசி எண்ணில் அழைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் மேனகா தெரிவித்துள்ளார். மேலும், தன்னை ‘மச்சான்’ என்று அழைக்குமாறு கூறி அந்த அதிகாரி தொடர்ந்து மனரீதியான அழுத்தத்தை அளித்ததுடன், பலமுறை பாலியல் அத்துமீறல்களிலும், கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக அவர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
சட்டத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியே, சக பெண் காவலரிடம் இத்தகைய இழிவான முறையில் நடந்துகொண்டது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீருடை அணிந்த ஒரு பெண் காவலருக்கே இந்த நிலை என்றால், சாதாரண எளிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தி, குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…