திருவள்ளூர் மாவட்டம் சத்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சௌமியா. கணவன் மனைவி இருவரும் கடம்பத்தூரில் வீடியோ எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 21ஆம் தேதி சௌமியா வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் சௌமியாவை வழிமறித்து அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்து தனுடன் தனிமையில் உல்லாசமாக இருக்குமாறு அநாகரீகமாக பேசி உள்ளார்.
மேலும் அவரது கையை பிடித்து இழுத்து பைக்கில் ஏறுமாறு கட்டாயப்படுத்தியதோடு சௌமியாவின் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சௌமியா தனது கணவர் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த ராஜ்குமார் அருணை கண்டித்துள்ளார்.
அப்போது அருண் தனது நண்பர்களான கோபி, கபிலன், மனோஜ் ஆகியோருடன் இணைந்து ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த ராஜகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர
