இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா?… திருமணமான பெண்கள் இறைச்சி சாப்பிடவே கூடாதாம்… வியக்க வைக்கும் காரணம்…!

By Divyamayakannan on ஆவணி 30, 2025

Spread the love

தெலுங்கானா விகாராபாத் மாவட்டம், வால்யநாயக் தண்டா என்ற கிராமத்தில் பல விசித்திரமான பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றன. பெண்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு வாழ்நாள் முழுவதும் இறைச்சி சாப்பிட கூடாதாம். பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத் தலைவராக இருந்த சீதம்மா மற்றும் மாரியம்மா இருவரும் இது போன்ற கலாச்சாரத்தை கொண்டு வந்துள்ளனர். அந்த சமயத்தில் காலரா என்ற நோய் பரவி வந்துள்ளதாம். அந்தக் காலத்தில் காலரா வராவிட்டால் மருமகள்கள் இறைச்சி சாப்பிடுவதை விட்டு விடுவோம் என்று சத்தியம் செய்தார்களாம். பல வருடங்கள் ஆகிவிட்டது இருப்பினும் இந்த வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த விழாவிற்கு முந்தைய நாள் சீதம்மாவை வழிபடுவார்களாம். வெள்ளியில் அம்மன் சிலை தயாரித்து கிராமத்தில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு பெட்டியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்களாம். கிராமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆண்கள் இறைச்சி சாப்பிட வேண்டுமென்றால் கிராமத்திற்கு வெளியே வேறு பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவார்கள்.  சாப்பிட்ட பின் குளித்துவிட்டு தான் வீட்டிற்கு வருவார்கள் என்றும் விசித்திரமான  தகவலை தெரிவித்துள்ளனர்.