யூடியூப் சேனல் பெண் தொகுப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகரும் பாஜக பிரசார பிரிவு மாநில செயலாளருமான ரவி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 14-ஆம் தேதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளிப்பதற்காகச் சென்றபோது, ரவி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு ஆபாசமாகப் பேசியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளர் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்பெண் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட அசோக் நகர் போலீசார், ரவி மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான ரவி விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
