கர்நாடகாவைப் பார்த்து கத்துக்கோங்க…. “தஞ்சை பாலைவனமாக மாறும்”…. முதலமைச்சர் விஜய்க்கு துரைமுருகன் விடுத்த பகீர் எச்சரிக்கை….!

By Nanthini on கார்த்திகை 18, 2026

Spread the love

மேகதாது அணை விவகாரம் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்னையை தமிழக அரசு தீவிரமாகக் கவனத்தில் கொள்ளாவிட்டால் தஞ்சை டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளார். இது எந்தவொரு தனிப்பட்ட கட்சி சார்ந்த பிரச்னை அல்ல என்றும், ஒட்டுமொத்த தமிழகத்தின் வாழ்வாதாரம் தொடர்பானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அம்மாநில நலனுக்காக ஓரணியில் திரண்டு குரல் கொடுப்பது போல், தமிழகமும் ஒருமித்த குரலில் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரத்தில் ஆளும் தவெக அரசு அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பதாக சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதில் முதலமைச்சர் விஜய்க்கு என்ன தயக்கம் அல்லது சிக்கல் உள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே தற்போதைய உடனடித் தேவை என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.