அய்யோ… நான் செஞ்சது பெரிய தப்பு… ரொம்ப வெட்கப்படுறேன்… வெளிநாட்டு பெண் யூடியூபரிடம் அத்துமீறி… கைதான இளைஞர் கதறி அழும் மன்னிப்பு வீடியோ… இணையத்தில் வைரல்…!

By Swetha on கார்த்திகை 18, 2026

Spread the love

உதய்பூரில் தாய்லாந்து-பிரெஞ்சு யூடியூபர் ஜஸ்ட்கெத் இரவு நேர நேரலையில் ஈடுபட்டிருந்தபோது, அவரிடம் செல்ஃபி எடுப்பதற்குப் பதிலாக உதட்டில் முத்தம் கேட்ட அஃப்தாப் என்பவர் தற்போது பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். அந்த நேரலையின் போது யூடியூபர் அதிர்ச்சியடைந்து அதனை மறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது.

இந்த விவகாரம் தொடர்பாக சூரஜ்போல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தான் கைது செய்யப்பட்டதாக அஃப்தாப் தனது மன்னிப்பு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

   

காதைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்ட அவர், தனது செயலுக்காக மிகவும் வெட்கப்படுவதாகவும், பெண்களையும் வெளிநாட்டு விருந்தினர்களையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.