உலகமே அதிர்ச்சி..! “பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உயிருடன் இருக்கிறார்” இஸ்ரேலில் பதுங்கல் – முன்னாள் காதலி கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!

By Soundarya on மாசி 9, 2026

Spread the love

அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019-ல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக அவரது முன்னாள் காதலி கிளப்பியுள்ள தகவல் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்ஸ்டீன் தற்போது இஸ்ரேலில் பதுங்கியிருப்பதாகக் கூறும் அவர், சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 3,000-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். குறிப்பாக, சிறையில் உடல்கள் மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படும் மின்னஞ்சல்கள் மற்றும் எப்ஸ்டீனின் மர்ம மரணம் குறித்த சந்தேகங்களை இந்தத் தகவல் மீண்டும் உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், இஸ்ரேல் தலைநகரில் எப்ஸ்டீன் போன்ற தோற்றம் கொண்ட நபர் ஒருவர் தாடியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி “காட்டுத்தீயாக” பரவி வருகின்றன. 2019-ல் அவர் இறந்தபோது எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் உடற்கூறாய்வு புகைப்படங்களில் இருந்த குளறுபடிகளே இந்தச் சந்தேகங்களுக்குத் தொடக்கப்புள்ளியாக இருந்தன. தற்போது அவரது காதலியின் இந்த அதிரடிப் பேட்டி, எப்ஸ்டீன் மரணத்தின் பின்னால் இருக்கும் ரகசியங்களை மீண்டும் சர்வதேசக் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.