26 வயது நடிகையை கட்டிப்பிடித்த ரூம் பாய்… ஹோட்டல் அறைக்குள் நடந்த கொடூரம்… அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிய அதிர்ச்சி சம்பவம்..!!

By Soundarya on மாசி 9, 2026

Spread the love

சென்னையில் படப்பிடிப்புக்காகத் தங்கியிருந்த கேரள நடிகையிடம், ஹோட்டல் ஊழியர் போல் நடித்து அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாம்பலம் தாமஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அந்த 26 வயது நடிகை, தனது அறையின் இண்டர்காம் போன் பழுதடைந்ததாகப் புகார் அளித்துள்ளார். அதனைச் சரி செய்ய வந்ததாகக் கூறி அறைக்குள் நுழைந்த நபர், நீண்ட நேரம் அங்கேயே இருந்துவிட்டு, திடீரென நடிகையுடன் செல்பி எடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

நடிகை விருப்பமில்லாமல் சம்மதித்த நிலையில், செல்பி எடுப்பது போல நெருங்கி வந்து அவரைத் திடீரெனக் கட்டிப்பிடித்துத் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை கூச்சலிட்டபடி அறையை விட்டு வெளியே ஓடித் தப்பியுள்ளார். உடனடியாக அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாம்பலம் போலீசார் அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். ஹோட்டல் ஊழியர் என்ற போர்வையில் நடந்த இந்த அத்துமீறல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.