நீர்வீழ்ச்சிப் பகுதியில் சிக்கிக்கொண்ட இளம்பெண் ஒருவருக்கு உதவ முன்வந்தவர்களின் பின்னணியில் உள்ள இரட்டை நிலைப்பாடு குறித்துச் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதம் வெடித்துள்ளது. காதலனுடன் நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் சென்ற பெண் அங்கு மாட்டிக்கொள்ள, ஆபத்தில் இருக்கும் பெண்ணுக்கு உதவுவது போல் நடித்துக் கூட்டமாகத் திரண்ட ஆண்களின் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த பெண்ணின் காதலன் தனிப்பட்ட கருத்து வேறுபாடால் பெண்ணின் பேண்ட்டை கழற்றி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
51 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த விவகாரம் குறித்துப் பதிவிட்ட நெட்டிசன்கள், உதவி என்ற போர்வையில் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும், கேளிக்கைகளுக்காகவும் மட்டும் ஓடிவரும் சமூகத்தின் கேவலமான மற்றும் சந்தர்ப்பவாத மனநிலையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெண்களின் இக்கட்டான சூழ்நிலையைச் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வியூஸ் தேடும் போக்கு அதிகரித்து வருவது குறித்துப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
