என் வாழ்க்கைக்கு என்ன பதில்…? காதலன் வீட்டு வாசலில் 7 மாத கர்ப்பிணி… ஹால்பிடலில் தொடங்கிய காதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 7, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அருணா என்ற பெண்ணும் சிரவன் என்பவரும் முதன்முறையாகச் சந்தித்துப் பழகியுள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில், சிரவன் அந்தப் பெண்ணை ஏமாற்றி உறவு வைத்துள்ளார். இதன் காரணமாக அந்தப் பெண் தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், அவரைக் கைகழுவிவிட்டு திருமணம் செய்து கொள்ள சிரவன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

காதலனின் இந்த வஞ்சகச் செயலால் அதிர்ச்சியடைந்த அருணா, நியாயம் கேட்கும் வகையில் படன்செரு பகுதியில் அமைந்துள்ள சிரவனின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அதன் நுழைவாயில் முன்பாகத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். தான் ஏமாற்றப்பட்டதாகவும், தனது வயிற்றிலிருக்கும் குழந்தைக்குச் சிரவனே காரணம் என்பதால் அவரைத் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.