எட்டிப்பிடித்து முதலிடத்திற்கு வந்த மூன்று முடிச்சு… இந்த வார TRP-யில் டாப் 6 இல் இடம்பிடித்த சீரியல்கள்..!

By Soundarya on தை 3, 2025

Spread the love

பொதுவாக சீரியல்களுக்கு எப்போதுமே இல்லத்தரசிகள் மத்தியில் தனி இடம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி மற்றும் சன் டிவி சேனல்கள் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாக்கப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் ஏழு நாட்களுமே ஒளிபரப்பப்பட்டு வருகிறது .சீரியலுக்கு மக்கள் எந்த அளவு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அதனுடைய டிஆர்பி ரேட்டிங் இருக்கும். அந்த வகையில்இந்த வார  டாப் 10 டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

   

மூன்று முடிச்சு சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.48 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளது.

   

 

சிங்க பெண்ணே சீரியல் 9.47 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சஞ்சீவி நடித்த கயல் சீரியல் 9.46 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல் ஆன சிறகடிக்க ஆசை 8. 87 புள்ளிகளோடு நான்காம் இடத்தில் உள்ளது .

சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் 8.71 புள்ளிகளோடு ஐந்தாம் இடத்தில் உள்ளது .

ராமாயணம் தொடர் 8.54 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது.