தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பை விட ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதன்படி தற்போது ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 18 ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தி பிக்பாஸை வழக்கம் போல சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் பிரபலமான ஸ்ருதிகா அர்ஜூன் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்ற இவர் சூர்யாவுடன் ஸ்ரீ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர் சினிமாவை வீட்டை விலகிய நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அந்த நிகழ்ச்சி மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் நன்கு பிரபலமானார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தனது டிரேட்மார்க் சேட்டைகளால் சல்மான் கானையும் கவர்ந்து வரும் இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அங்கேயும் உருவாக்கி விட்டார். பிக்பாஸ்ஹே சுருதிஹாவின் பேனாக மாறிவிட்டார்.
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியும் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் அனைவரும் பினாலே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேமிலி ரவுண்டு நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வீட்டுக்குள் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அதன்படி ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜூன், மற்றும் மகன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர். தனது மகனை கட்டி அணைத்து சுருதிகா தேம்பித் தேம்பி அழுகின்றார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.