ராங் ரூட்டில் நண்பருடன் அதிவேகப் பயணம்.. காவலர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய “எதிர்நீச்சல்” சீரியல் நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

By Ranjith Kumar on பிப்ரவரி 26, 2024

Spread the love

சின்னத்திரை நட்சத்திரமான “எதிர்நீச்சல்” சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் “மதுமிதா” என்பவர் கார் விபத்து ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது அதற்கான விசாரணை காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கன்னடா சின்னத்திரையில் சில சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்தான் மதுமிதா, தற்போது இவர் தமிழில் முதல் நாடகமாக “எதிர்நீச்சல்” நாடகத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்,

 

   

இவர் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்று கூறலாம். இவர் நாடகத்திற்கும் இவர் நடிப்பிற்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவரின் புகைப்படத்தை தான் சீரியலின் டைட்டிலில் கூட இருக்கும், அந்த அளவு இவர் பிரபலமானவராக சின்ன திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சீரியல் படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் தனது ஐடி நண்பருடன் மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்து ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

   

சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் ஒருவழிச் சாலையில் ராங் ரோட்டில் எதிர் திசையில் அதிவேகமாக சென்றிருக்கிறார்கள், அந்த சமயத்தில் எதிரே இருசக்கர வாகனத்தில் காவலர் ஒருவர் வந்திருக்கிறார், இவர்கள் மிக வேகமாக சென்று அவர் இருசக்கர வாகனத்தில் மோதி அவருக்கு பெரும் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அதன் பின் விஷயம் அறிந்த வந்த காவலரிடம் தன் மேல் தப்பு இல்லை என்றும் காவலர் தான் வேகமாக வந்து எங்க காரில் மோதினார் என்றும் காவலர் மேல் பழியை போட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

தற்போது இவரும் இவர் நண்பரும் சேர்ந்து குடித்துவிட்டு தான் காரில் வந்தார்கள் என்று கண்டறிந்து உள்ளார்கள். காவல் நிலையத்தில் வைத்து இவர்களை விசாரித்து வருகிறார்கள். விபத்தில் உள்ளான காவலருக்கு தற்போது சிகிச்சை பெற்று மீண்டு வருகிறார் என்று தகவல் வழியாக இருக்கிறது.