விஜய் என்னோட நண்பர் இல்ல.. அந்த விஷயம் அவர்கிட்ட இருக்கு.. செய்தியாளர் சந்திப்பில் பிரஷாந்த் பளிச்..

By Ranjith Kumar on பிப்ரவரி 26, 2024

Spread the love

90 மற்றும் 20 காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து பிரசாந்த் அவர்கள் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பு தளபதி விஜய் பற்றி பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். கோட் மற்றும் அந்தகன் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து கொண்டிருக்கும் பிரசாந்த் அவர்கள் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தளபதி விஜய் உடன் நடிக்கும் படத்தையும் அவர் அரசியல் வருவதையும் மக்கள் விழிப்புணர்வு பற்றியும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசி உள்ளார்.

பிரசாந்த்; மக்கள் தலைக்கவசம் அணிவது மிக முக்கியமானது, தலைக்கவசம் அது நம் உயிர் கவசம் என்று கூறினார், மக்களிடம் அன்பாக கேட்டுக்கொண்டார், அனைவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் போட்டு செல்ல வேண்டும். அதன் பின்னதாக “அந்தகன்” படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

   

விரைவில் திரைக்கு வரும், விஜய் அவர்களுடன் நீண்ட நாள் பிறகு பணியாற்றி வருவது எனக்கு மிக மகிழ்ச்சி, அந்த படப்பிடிப்பு மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது, கோட் படம் சீக்கிரம் நல்ல தேதியில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம். அதன் பின்னர் விஜய் அவர்கள் அரசியல் வருவது எனக்கு மிக சந்தோஷம். அவர் என் நண்பர் அல்ல என் சகோதரர் போல் என்று விஜய் அவர்களை பெருமிதமாக தன் சகோதரன் என்று பேசியுள்ளார்.

   

விஜய் அவர்கள் தற்போது அரசியல் வருவது மிக நல்ல விஷயம், வரவேற்கத்தக்க விஷயம் என்றும் தெரிவித்திருக்கிறார். மலைத் தேக்கத்தால் தென் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட போது விஜய் அவர்கள் மக்களுக்காக இறங்கி நல் பணிகளை செய்து வந்தது மிக பாராட்டக்கூடிய விஷயம். அவர் மேலும் மேலும் இது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும் என்று பிரசாந்த் அவர்கள் விஜயை பெருமிதமாக பாராட்டியுள்ளார்.