மீண்டும் மீண்டும… மேடையில் முதியவரை அசிங்கப்படுத்திய நடிகர் சிவகுமார்.. சர்ச்சையாகும் வீடியோ வைரல்..

By Ranjith Kumar

Published on:

சில வருடங்களுக்கு முன்னால் ரசிகன் ஒருவர் சிவக்குமாரை பார்த்து ஆசையில் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று செல்போனை எடுத்து செல்பி எடுக்கும் பொழுது சிவக்குமார் அவர்கள் அந்த செல்போனை தட்டி விட்ட வீடியோ பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி பெரும் பேசும் பொருளாக விமர்சிக்கப்பட்டது. இப்பொழுது அதை தொடர்ந்து சிவகங்கை உள்ள ஒரு புத்தக வெளியீட்டு விழாவின்போது இதே போல் ஒரு ஒரு முதியவர் தனக்கு சால்வை அணிய வந்தபோது அதை மேடையில் இருந்து கீழே எரிந்து மீண்டும் சர்ச்சை மாட்டி உள்ளார் சிவக்குமார்.

சிவகங்கையில் உள்ள காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் “பல கருப்பையா” அவர்கள் எழுதி “இப்படித்தான் உருவானேன்” என்ற புத்தகத்தை வெளியிட்டு விழாவிற்கு சிவகுமார் மற்றும் நெடுமாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் பழ கருப்பையாவின் செயல் குறித்து புகழ்ந்து பேசிய சிவகுமார்
தன்னைவிட இரண்டு வயது சிறியவனாக இருந்தாலும் அவர் செய்யும் அபாரமான விஷயத்திற்காக அவர் காலில் விழுவேன் என்று சொல்லிக் கொண்டே அவர் காலில் விழுந்த சிவக்குமார், அதைக் கண்ட மக்கள் அனைவரும் ஆச்சரியத்திற்கு அதிர்ச்சிக்கும் உள்ளானார்கள்.

   

அந்த நிகழ்ச்சி முடிந்தபின் சிவக்குமாரின் ரசிகனான வயதான ஒருவர் சிவகுமாருக்கு சால்வை அணிவதற்காக வந்தார் அதை கண்ட சிவகுமார் ஷால்வை பிடுங்கி மேடையில் இருந்து கீழே எரிந்து விட்டார், அந்த முதியவரின் முகம் வாடி போனது ஆனால் அதைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காத சிவக்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இதே போல தான் சில வருடங்களுக்கு முன்னால் தனுடன் புகைப்படம் எடுக்க வந்த ஒரு வாலிபனின் செல்போனை தட்டி விட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானார்.

சிவகுமார் அவர்கள் மேடையில் மனநிலையையும் உடல் நிலையும் கட்டுக்கோப்பாக வைக்க நான் பல உடற்பயிற்சியும் தியானமும் செய்து வருகிறேன் என்று பல இடத்தில் பேசியதை தற்போது இணையத்தில் எடுத்து வைரலாக்கி நெட்டிசன்கள் அதை கலாய்த்து வருகிறார்கள், பொறுமையாக ரசிகரை கையாள தெரியாதவர் பொறுமையைப் பற்றி பல இடங்கள் பேசுகிறார்கள் என்று பலரும் இவரை வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar